Sinhala (Sri Lanka)English (United Kingdom)
கமத்தொழில், கமத்தொழில் அபிவிருத்தி, மிருக உற்பத்தி, உள்நாட்டு கடற்றொழில், சுற்றாடல், சுற்றுலாதறை அமைச்சு
முகப்பு சேவைகள்

சேவைகள்

alt ஆரோக்கியமான பண்ணை விலங்குச் சாகியமொன்றைப் பேணிவரும் பொருட்டு திணைக்களம் விலங்கு நோய்களைக் கண்டறிதல், நோயுற்ற விலங்குகளுக்கு சிகிச்சை அளித்தல், பெருவாரியாகப் பரவும் நோய்களுக்கான நோயெதிர்ப்பு தடுப்பூசியேற்றல் ஆகிய பணிகளை ஈடேற்றிவருவதோடு உலர் வலயத்தில் பரவலாக பீடிக்கப்படுகின்ற குருதிப்போக்கு, குளம்புநோய் மற்றும் வலிப்பு நோய் போன்ற நோய்களைத் தடுப்பதற்காக வருடந்தோறும் இலவசமாக நோயெதிர்ப்பு தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. விலங்குகளை ஏற்றிச்செல்கையில் சுகாதார சான்றிதழை விநியோகிப்பதும் திணைக்களத்தினால் ஈடேற்றப்படுகின்றது. பொதுச் சுகாதாரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைகின்ற பறவைகளினால் பரவக்கூடிய பகுதியளவிலான பெருவாரியாகப் பரவும் நோய்களை இனங்காணல்    மற்றும் கட்டுப்படுத்துதல் மூலமாக பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்யப்படுகின்றது.
alt

செயற்கை முறைச் சினைப்படுத்தல்
இங்கு பசுக்களையும் மறி ஆடுகளையும் செயற்கையாக கருத்தரிக்கச் செய்வித்தல் மூலமாக மாகாணத்திற்குப் பொருத்தமான அதிக உற்பத்தியைத் தரவல்ல விலங்குகள் பெருகச் செய்விக்கப்படுகின்றன.

கருவுற்றநிலை பற்றிய பரிசோதனை

செயற்கைமுறைச் சினைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விலங்குகளின் கருக்கட்டலைப் பரிசோதனை செய்வதன் மூலமாக செயற்கைமுறை சினைப்படுத்தலின் வெற்றிகரமான தன்மையைப் பரிசோதிக்கின்ற அதே வேளையில் கருவுற்ற காலத்தில் சரியான கட்டுப்பாட்டின் பால் விவசாயிகள் வழிப்படுத்தப்படுவர்.

பசுக்கன்றுகளின் பிறப்புக்களை அறிக்கையாகப் பேணுதல்
செயற்கைமுறைச் சினைப்படுத்தல் மூலமாகப் பிறக்கின்ற கன்றுகளின் பிறப்பு பற்றிய அறிக்கைகளைப் பேணுதல் இங்கு இடம்பெறுவதோடு, அவ்விலங்குகளின் முறையான கட்டுப்பாடு, போசாக்கு மற்றும் சுகாதாரக் கவனிப்புக்கான தொடர் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டவும் இது பயனுள்ளதாக அமையும்.

பாலியல் கிளர்ச்சி நிலை இணைப்பாக்க நிகழ்ச்சிகளை நடத்துதல்.
செயற்கைமுறை சினைப்படுத்தல் சேவைகளை அடிக்கடி பெற்றுக்கொள்வதிலான வசதியீனங்கள் நிலவுகின்ற கஷ;ரப் பிரதேசங்களில் பசுக்களை கூட்டமாக ஒன்று சேர்த்து, பாலியல் கிளர்ச்சி நிலையை ஏற்படுத்தி செயற்கைமுறை சினைப்படுத்தல் இங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

இனப்பெருக்க பயனுறுதி குறைந்த உயர்ரக பசுக்களின் இனப்பெருக்க பயனுறுதியை சிறப்புத் தொழில்நுட்ப முறைகளினூடாக அதிகரித்தல்.

இனப்பெருக்க பண்ணைகளை நிறுவுதல்.
உயர்ரக பாற்பசுக்களின் தட்டுப்பாட்டுக்கான தீர்வாக பாற்பசுக்களைப் பெருகச் செய்வித்து விநியோகிக்கும் இனப்பெருக்கப் பண்ணைகள் தாபிக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட மாட்டுப் பண்ணைகள் இனப்பெருக்கப் பண்ணைகளாக விருத்தி செய்யப்படுவதோடு பண்ணைகளின் அபிவிருத்தி தேவைகளை இனங்கண்டு பாற்பசுக்களை  வழங்குதல், முறையான மாட்டுத் தொழுவங்களை நிர்மாணித்தல், புல் வளர்த்தல் போன்றவை 50% அரச நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது.

விதையடித்தல் (நலம் போடல்)
உற்பத்தித்திறன் குறைந்த விலங்குகள் பல்கிப் பெருகுவதைத் தடுக்கும் பொருட்டு மாடுகள், ஆடுகள். செம்மறி, பன்றிகள் ஆகியவற்றின் ஆண் விலங்குகளின் இனப்பெருக்க ஆற்றலை இல்லாதொழித்தலே இங்கு இடம்பெறுகின்றது.

பால் பற்றிய அறிக்கை பெறும் நிகழ்ச்சித்திட்டம்.
இலங்கைக்கு ஒத்துவரக்கூடிய உயர்ரக பாற்பசுக்களின் தலைமுறையொன்றை பெருகச் செய்விப்பதற்காக தேசிய மட்டத்தில் அமுலாக்கப்படுகின்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அதிக பால் உற்பத்தி கொண்ட தெரிவு செய்யப்பட்ட பசுக்களின் பால் உற்பத்தி பற்றிய அறிக்கைகள் மாதாந்தம் பெறப்படுவதோடு அதன் பொருட்டு விவசாயிக்கு கொடுப்பனவொன்றும் செலுத்தப்படுகின்றது.

alt

உயர் ரகத்தைச் சேர்ந்த பண்ணை விலங்குகளை விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டு இணைப்பாக்கச் செயற்பாடுகளை மேற்கொள்ளல், விலங்குகளின் உற்பத்தித்திறன் மற்றும் சுகாதாரநிலை பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கை இடம்பெறுவதோடு, பின்வரும் விசேட நிகழ்ச்சித்திட்டமும் அமுலாக்கப்பட்டு வருகின்றது.

அரச நிதிப் பங்களிப்பு அடிப்படை

விலங்கின் பெறுமதியில் 50% ஐ திணைக்களம் ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் உயர் ரக பாற்பசுக்கள், பொலி காளைகள், ஆடுகள், ஒரு மாத வயதுடைய கோழிக் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. இங்கு திணைக்களம் ஏற்கும் 50% பங்களிப்பு கீழே குறிப்பிட்ட உச்சவரம்புக்கு உட்பட்டதாக அமைவதோடு, அதன் பெறுமதி காலத்திற்கேற்ப மாறுபடும்.

பாற்பசுக்கள் - ரூ: 20,000/-
பொலி காளைகள் - ரூ: 20,000/-
ஆடுகள் - ரூ: 7,500/-
ஒரு மாத வயதுடைய கோழிக் குஞ்சுகள் - ரூ: 110/-

குத்தகை (வாரக்குடி) அடிப்படை
ஊவா மாகாணத்தில் தற்போது நிறுவபப்பட்டுள்ள கால்நடை வள வங்கிகள் மூலமாக பின்வரும் அடிப்படையில் பாற்பசுக்களும் ஆடுகளும் வழங்கப்படுகின்றன.

  1. பிறக்கின்ற இளம் பசுக்களை கருத்தரித்து 04 வருட காலப்பகுதிக்குள்ளே திணைக்களத்திற்கு மீள ஒப்படைக்கும் வாரக்குடி அடிப்படையில் பாற்பசுக்கள் வழங்கப்படுதல்.
  2. வழங்கப்படுகின்ற விலங்குகளின் எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கை கொண்ட விலங்குகளை 04 வருட காலப் பகுதிக்குள் திணைக்களத்திடம் மீள ஒப்படைக்கும் வாரக்குடி அடிப்படையில் ஆடுகள் வழங்கப்படுதல்.

இந்நிகழ்ச்சித்திட்டங்களின் போது நலன் பெறுநர்கள் பொருத்தமான விலங்கு இருப்பிடங்களை  அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதோடு, அவ்விலங்குகளை திணைக்களத்தின் பெயரில் காப்புறுதி செய்யவும் வேண்டும்.

alt

புதிய புல்நிலங்களை அமைத்தல்
அதிக போசாக்கு கொண்ட புல்லினங்களின் நடுகைப் பொருட்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி குறைந்த பட்ச பரப்பளவு 20 பர்ச்சஸ் விஸ்தீரணமுடைய புல் நிலக் கூறுகள் அமைக்கப்படும்.

மிகையான விவசாய பயிர்கள், யூரியா மெலேசஸ் கனிப்பொருள் கட்டிகள் போன்று மாற்று விலங்கு உணவின் பால் விவசாயிகளை ஆற்றுப்படுத்தல்..

புற்களைத் துண்டங்களாக்கும் கருவிகளை வழங்குதல்.
பாற் பசுக்களின் திறந்த போசாக்கினை நோக்கமாகக் கொண்டு, ஒழுங்கான மாட்டுத் தொழுவங்கள் மற்றும் குறைந்த பட்சம் 03 பாற் பசுக்களை வைத்திருக்கின்ற விவசாயிகளுக்கு அரச நிதிசார் பங்களிப்பு அடிப்படையில் இக்கருவிகள் வழங்கப்படும்.

கோழி வளர்ப்பின் போது பிரதேச நீதியாக பெற்றுக்கொள்ளக்கூடிய மூலப் பொருட்களைப் பாவித்து உணவுப் பங்கீட்டினைத் தயாரிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு வழிகாட்டல்.

alt பண்ணைகளுக்குச் சென்று ஆலோசனை வழங்குதல், கமக்காரர் பயிற்சி வகுப்புகள். செயலமர்வுகள், வெளிக்கள தினங்கள் மற்றும் கமக்காரர் கருத்தரங்குகளை நடத்துவதன் மூலமாகவும் நூல்கள் மற்றும், செய்தித்தாள்கள் மூலமாகவும் நவீன தொழில்நுட்ப அறிவினை வழங்குவத்தினூடாக கமக்காரர்களின் அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு விருத்தி செய்யப்படுகின்றது.
alt

ஒழுங்குமுறையான மாட்டுத் தொழுவங்களை தாபித்தல்.
கால்நடைகளின் சுகாதார நிலையைப் பாதுகாத்தல் மற்றும்; அதிகரித்த உற்பத்தியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் ஒழுங்கான மாட்டுத் தொழுவங்களை அமைக்க திணைக்களத்தினால் 50% அரச நிதிப் பங்களிப்புடன் ரூபா 15,000/- உச்சவரம்பிற்கு கட்டுப்பட்டதாக வழங்கப்படுகின்றது.

உயிர் வாயுப் பிறப்பாக்கிகளை நிறுவுதல்.
சக்திவலுத் தேவையை ஈடேற்றுகின்றதும் விலங்கு கழிவுப்பொருள் முகாமைக்கு உதவக் கூடியதுமான உயிர்வாயுப் பிறப்பாக்கிகளை நிர்மாணிப்பதற்கும் திணைக்களம் 50% அரச நிதிப் பங்களிப்பாக ரூபா 30,000/- உச்சவரம்புக்கு கட்டுப்பட்டதாக வழங்குகின்றது. இதன் பொருட்டு நலன்பெறுநர்கள் போதியளவு எண்ணிக்கை கொண்ட கால்நடைகளையும் ஒழுங்கான மாட்டுப் தொழுவத்தையும் கொண்டிருத்தல்.

மனைசார் கோழிப் பண்ணைகளை நிறுவுதல்

குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களின் போசாக்கின்மையை ஒழிக்கும் பொருட்டு 50% அரச நிதிப் பங்களிப்பின் அடிப்படையில் ஒரு மாத வயதுடைய 10 கோழிக் குஞ்சுகள் வீதம் வழங்குவதன் மூலமாக மனைசார் கோழிப் பண்ணைகள் நிறுவப்படும்.

alt பால் சந்தைப்படுத்தல் வசதிகளையும் குறைந்த பட்சம் 20 பாற்பண்ணைகளையும் கொண்ட கிராமங்களைத் தெரிவு செய்து ஒரு வருட காலப் பகுதிக்குள் இக்கிராமமொன்றின் ஆகக்குறைந்த நாளாந்தப் பால் உற்பத்தியை குறை;நத பட்சம் 200 லீற்றர்களால் அதிகரிக்கும் நோக்கத்துடன் 50% அரச நிதிப் பங்களிப்புடன் பாற்பசுக்களை வழங்குதல், மாட்டுத் தொழுவங்களை அமைத்தல், புல் அபிவிருத்தி, விவசாயிகளின் பயிற்சி ஆகிய நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்குதல்.
alt

விலங்கு உற்பத்தியாளர்களின் அமைப்பாண்மைகளைத் தாபித்தல்.
விலங்கு உற்பத்தி சந்தைப்படுத்தல் பணிகளின் விருத்திக்காக விலங்கு உற்பத்தியாளர்களின் அமைப்பாண்மைகளை விசேடமாக பால் உற்பத்தியாளர்களின் அமைப்புகள் தாபிக்கப்படுவதை இணைப்பாக்கம் செய்கின்றது.

பசும்பால் விற்பனை நிலையங்களை நிறுவுதல்
பசும்பால் நுகர்வினை விரிவாக்குவதற்காக பசும்பால் விற்பனை நிலையங்களை நிறுவுவதற்கேதுவாக விவசாய அமைப்புகளையும் வர்த்தக சமூகத்தையும் ஊக்குவித்து அதற்கான நிதிப்பங்களிப்பு வழங்கப்படுகின்றது.

பால் துணை உற்பத்திகளைத் தயாரிக்கும் பொருட்டு தொழில்நுட்ப பங்களிப்பினை வழங்குதல்

alt மாடுகள் - ஆடுகளைக் காப்புறுதி செய்வதற்காக இணைப்பாக்கமும் தரச் சான்றிதழ் வழங்குதலும் இடம்பெறுகின்றது.


திணைக்களத்தினால் வேறு அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சேவைகள்

  • உத்தியோகத்தர் பயிற்சியும் விவசாயிகளின் பயிற்சியும்
  • தொழில்நுட்ப உதவி


திணைக்களத்தினால் தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்படும் சேவைகள்

  • விலங்கு வேளாண்மை மதியுரை சேவைகள்.


தற்போது அமுலாக்கப்படுகின்ற கருத்திட்டங்கள்

  1. பாற்பண்ணைகளின் அபிவிருத்தி
  2. பாற் கிராம நிகழ்ச்சித்திட்டம்
  3. கோழி உற்பத்தி அபிவிருத்தி
  4. ஆடு வளர்ப்பு
  5. நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்

50% மானியம் வழங்கல் தொடக்கத் திகதி :


தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டம்

மிருக வைத்தியர் பிரிவு திகதி இன்றுவரை
 கந்தக்கட்டிய    
 ரிரதீமாலியத்த    
 மஹியங்கன    
 பிபில    
 மொனறாகல    
 சியம்பலாண்டுவ    
 கதிர்காமம்    
 செவனகல    
 மடுல்ல    
 வெல்லவாய    
 தனமல்வில    
 புத்தல    
 மெதகம    

 
மார்ச் 2020
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4

The Government Information centerr